தமிழ் பணம் யின் அர்த்தம்

பணம்

பெயர்ச்சொல்

  • 1

    அரசினால் வெவ்வேறு மதிப்புக் கொண்டதாக அச்சிடப்பட்டு வெளியிடப்படுவதும் பொருள்களையும் சேவைகளையும் வாங்குதல், விற்றல் அல்லது அளித்தல் போன்ற செயல்பாடுகளுக்குப் பயன்படுவதுமான தாள், நாணயம் ஆகியவை.

  • 2

    (ஒருவரிடம்) அதிகப் பண இருப்பு.

    ‘பணத் திமிரில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாயா?’
    ‘அவனிடம் பணம் இருக்கிறது என்பதால் கண்டபடி செலவு செய்கிறான்’