தமிழ் பணயம் யின் அர்த்தம்

பணயம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவர் தோற்றுவிட்டால் வெற்றி பெறுபவர் எடுத்துக்கொள்ளும் வகையில் அல்லது சொந்தமாக்கிக்கொள்ளும் வகையில்) பந்தயத்தில் ஈடுபடுத்தும் பணம், உடைமை போன்றவை.

  ‘குதிரைப் பந்தயத்திற்காகச் சொத்து முழுவதையும் பணயமாக வைக்கக்கூடியவர் அவர்’
  ‘எல்லாவற்றையும் சகுனியிடத்தில் சூதாடித் தோற்ற தருமன் கடைசியில் பாஞ்சாலியையே பணயமாக வைத்து ஆடினான்’

 • 2

  கடினமான செயலைச் செய்வதால் இழப்பதற்கு அல்லது பாதிப்புக்கு உள்ளாவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்தும் மேற்கொள்ளும் முயற்சி.

  ‘தீக்குள் அகப்பட்டுக்கொண்டவர்களை உயிரைப் பணயம்வைத்துத் தீயணைப்புப் படையினர் காப்பாற்றினர்’