பணி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பணி1பணி2பணி3

பணி1

வினைச்சொல்பணிய, பணிந்து, பணிக்க, பணித்து

 • 1

  (மரியாதை, அதிகாரம், கட்டளை போன்றவற்றுக்கு) கட்டுப்படுதல்; அடங்கிக் கீழ்ப்படிதல்.

  ‘அப்பா கோபமாகப் பேசினால் நீ பணிந்துபோகக் கூடாதா?’
  ‘உன் மிரட்டலுக்கு நான் பணிய மாட்டேன்’

 • 2

  உயர் வழக்கு (பாதம் நோக்கி) குனிந்து வணங்குதல்.

  ‘தாயின் பாதம் பணிந்து ஆசி பெற்றோம்’

பணி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பணி1பணி2பணி3

பணி2

வினைச்சொல்பணிய, பணிந்து, பணிக்க, பணித்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (ஒரு செயலை நிறைவேற்றும்படி அல்லது இன்ன முறையில் செய்யுமாறு) உத்தரவிடுதல்; கட்டளையிடுதல்; அறிவுறுத்துதல்.

  ‘விமான நிலையத்தில் விருந்தினரை விட்டுவிட்டு வருமாறு வேலையாளைப் பணித்தார்’
  ‘வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகையை உடனடியாக வழங்குமாறு அதிகாரிகளை அமைச்சர் பணித்தார்’
  ‘இதுபற்றிய தகவலை விரைவில் அனுப்பிவைக்குமாறு நீங்கள் பணிக்கப்படுகிறீர்கள்’
  ‘தங்களுக்கு இந்த விஷயத்தை நினைவூட்டுமாறு நான் பணிக்கப்பட்டுள்ளேன்’

பணி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பணி1பணி2பணி3

பணி3

பெயர்ச்சொல்

 • 1

  (அலுவலகம், தொழிற்சாலை முதலியவற்றில்) ஊதியம் பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட வேலையைச் செய்ய வேண்டிய பொறுப்பு; அந்தப் பொறுப்பில் இருந்து செய்யும் வேலை.

  ‘அவர் அரசுப் பணியில் உள்ளார்’
  ‘பணி நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது’
  ‘துப்புரவுப் பணி’

 • 2

  (கலைத் துறைக்கு அல்லது சமூகத்திற்கு ஒருவருடைய) பங்களிப்பு; சேவை.

  ‘அவர் செய்த கலைப் பணிகள் ஏராளம்’
  ‘ஓய்வுபெற்ற பிறகு தன்னை முழுமையாகச் சமூகப் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டார்’

 • 3

  (ஒரு செயல்பாடு, நிகழ்ச்சி போன்றவற்றை ஒட்டிய அல்லது அவற்றோடு தொடர்புடைய) வேலை.

  ‘சாலை சீரமைப்புப் பணி நடைபெறுகிறது’
  ‘தேர்தல் பணிக்காக ஒவ்வொரு வேட்பாளரும் பல லட்சம் ரூபாய்கள் செலவிடுகின்றனர்’
  ‘மழையின் காரணமாகக் கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நிற்கின்றன’