தமிழ் பணிப்பெண் யின் அர்த்தம்

பணிப்பெண்

பெயர்ச்சொல்

  • 1

    (மருத்துவமனை, தொழிற்சாலை போன்றவற்றில்) சிறுசிறு வேலைகளைக் கவனிக்கும் பெண் ஊழியர்.

    ‘முதியவர் பணிப்பெண்ணின் உதவியுடன் கட்டிலிலிருந்து கீழே இறங்கினார்’

  • 2

    உயர் வழக்கு (பெரும்பாலும் அரண்மனையில்) ஊழியம் செய்யும் பெண்.

    ‘பணிப்பெண்கள் புடைசூழ இளவரசி நந்தவனத்துக்குச் சென்றாள்’