பணிவு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பணிவு1பணிவு2

பணிவு1

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  பிறரிடம் (குறிப்பாகத் தன்னைவிட வயது, படிநிலை, படிப்பு போன்றவற்றில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம்) மரியாதையை வெளிப்படுத்தும் முறையில் அல்லது மற்றவர்களைவிடத் தன்னை உயர்வாகக் காட்டிக்கொள்ளாத முறையில் நடந்துகொள்ளும் தன்மை; அடக்கம்.

  ‘பணிவாகப் பேசினாலும் அவர் தன் கொள்கையை விட்டுக்கொடுக்கவில்லை’
  ‘பணிவான பையன்’
  ‘அவர் திறமைசாலி என்றாலும் கொஞ்சம்கூடப் பணிவு கிடையாது’

பணிவு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பணிவு1பணிவு2

பணிவு2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஓர் இடத்தில்) தாழ்வான பகுதி; தாழ்வாக அமைந்திருப்பது.

  ‘காணி சரியான பணிவாக இருக்கிறது. மழைக் காலத்தில் வெள்ளம் நிற்கும்’
  ‘பணிவான இடத்தில் ஏன் வீட்டைக் கட்டினாய்?’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு உயரக் குறைவு.

  ‘வீட்டுக் கூரையை இவ்வளவு பணிவாக ஏன் போட்டுள்ளாய்?’