தமிழ் பண்பாடு யின் அர்த்தம்

பண்பாடு

பெயர்ச்சொல்

 • 1

  குறிப்பிட்ட நாடு, இடம் போன்றவற்றைச் சேர்ந்த மக்களின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், மதம், மொழி, கலைகள், சிந்தனை வெளிப்பாடு, வாழ்க்கையுடன் தொடர்புகொண்டிருக்கும் பொருள்கள் போன்றவற்றின் மொத்தம்; கலாச்சாரம்.

  ‘தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றும் கோயில்கள்’
  ‘பாறை ஓவியங்களின் மூலம் கற்கால மனிதர்களின் பண்பாட்டை அறிய முடிகிறது’
  ‘பண்டைத் தமிழகத்தின் அரசியல், சமூக, பண்பாட்டு நிலையினைப் பெரும்பாலும் இலக்கியச் சான்றுகளிலிருந்தே அறிகிறோம்’

 • 2

  பிறரிடத்தில் அல்லது பலர் முன்னிலையில் ஒருவர் நடந்துகொள்ள வேண்டிய முறை.

  ‘பெரியவர்களுக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்கிற பண்பாடுகூட உனக்குத் தெரியாதா?’
  ‘பொதுவாக நாட்டில் தார்மீகப் பண்பாடுகள் குறைந்துவருவது வருந்தத் தக்க விஷயமாகும்’
  ‘சகோதர மனப்பான்மையுடன் சமூகத்தை அணுகுவதற்கான நல்ல பண்பாட்டைச் சாரணர் இயக்கம் மாணவர்களுக்குக் கற்றுத்தருகிறது’