தமிழ் பண்பு யின் அர்த்தம்

பண்பு

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  ஒன்றுக்கு இயல்பாக அல்லது அதற்கே உரித்தானதாக இருக்கும் தன்மை; இயல்பு.

  ‘மென்மை என்பது பூவிதழின் பண்பு’
  ‘கவிதைப் பண்பு’
  ‘எல்லோரும் ஜனநாயகப் பண்புகளை மதித்து நடந்துகொள்ள வேண்டும்’
  ‘எளிதில் தீப்பற்றிக்கொள்வது பாஸ்பரஸின் பண்பாகும்’

 • 2

  (மனிதனுடைய செயல், நடத்தை முதலியவற்றுக்கு) கண்ணியம் தரும் நல்ல இயல்பு; நற்குணம்.

  ‘நீயா இப்படிப் பண்பு இல்லாமல் பேசுகிறாய்?’
  ‘பண்பான பெண் அவள்’