தமிழ் பதக்கம் யின் அர்த்தம்

பதக்கம்

பெயர்ச்சொல்

 • 1

  (வெற்றி, சாதனை, ஒரு நிகழ்ச்சி போன்றவற்றின் நினைவாக அளிக்கப்படும்) உருவம், எழுத்து பொறிக்கப்பட்ட தங்கம், வெள்ளி போன்றவற்றால் ஆன வில்லை.

  ‘ஆசிய விளையாட்டுப் போட்டியில் நான்கு தங்கப் பதக்கம் பெற்றவருக்குப் பாராட்டு’
  ‘இது எங்கள் பள்ளியின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தின்போது வழங்கப்பட்ட பதக்கம்’

 • 2

  (சங்கிலி முதலியவற்றில் கோக்கப்படும்) ஏதேனும் ஒரு வடிவத்தில் செய்யப்பட்ட அல்லது கற்கள் பதிக்கப்பட்ட சிறு தங்க வில்லை.

  ‘மயில் பதக்கம் வைத்த சங்கிலி’
  ‘வைரக்கல் பதக்கம்’