தமிழ் பத்தாம்பசலி யின் அர்த்தம்

பத்தாம்பசலி

பெயர்ச்சொல்

  • 1

    (காலத்துக்கு ஏற்ற புதுமைகளையோ புதிய வழிமுறைகளையோ ஏற்றுக்கொள்ளாத) பழைய போக்கு; கர்நாடகம்.

    ‘‘பெண் பிள்ளைகள் படிக்கக் கூடாது’ என்று இன்னமும் அவர் பத்தாம்பசலித்தனமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்’

  • 2

    பழமைவாதி; பழைய முறையை மாற்றாதவர்.

    ‘இந்தப் பத்தாம்பசலியிடம் போய்க் கலப்புத் திருமணத்தைப் பற்றிப் பேசுகிறாயே!’