தமிழ் பத்தியம் யின் அர்த்தம்

பத்தியம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகளில்) (மருந்துக்காகவோ உடல்நிலையைப் பொறுத்தோ எதை விலக்க வேண்டும், எதைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற) உணவுக் கட்டுப்பாடு.

    ‘இந்த நோய்க்குப் பத்தியமெல்லாம் கிடையாது. நீங்கள் விரும்பியதைச் சாப்பிடலாம்’
    ‘அப்பாவுக்கு மட்டும் உப்பு இல்லாத பத்திய உணவு’