தமிழ் பத்திரிகை யின் அர்த்தம்

பத்திரிகை

பெயர்ச்சொல்

 • 1

  செய்திகள், கதைகள், கட்டுரைகள் போன்றவற்றைத் தொகுத்து அச்சிட்டுத் தினந்தோறும் அல்லது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடப்படுவது; செய்தித்தாள்/இதழ்.

  ‘காலையில் எழுந்ததும் முதல் வேலை பத்திரிகை படிப்பதுதான்’
  ‘வீட்டில் வாரப் பத்திரிகையும் மாதப் பத்திரிகையும் வாங்குகிறோம்’

 • 2

  (விழா அல்லது திருமணம் போன்ற சடங்குக்கான) அழைப்பிதழ்.

  ‘உற்சவப் பத்திரிகை’
  ‘நிச்சயதார்த்தப் பத்திரிகை உங்களுக்கு வந்ததா?’
  ‘அவனுக்குக் கல்யாணமாம், பத்திரிகை கொண்டு வந்திருக்கிறான்’