தமிழ் பீத்து யின் அர்த்தம்

பீத்து

வினைச்சொல்பீத்த, பீத்தி

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (பிறரைவிடத் தன்னை உயர்வாகக் காட்டிக்கொள்ளும் விதத்தில்) தற்பெருமையாகப் பேசுதல்.

  ‘அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்று சும்மா பீத்திக்கொண்டேயிருப்பான்’
  ‘அமெரிக்காவில் இருக்கும் தன் வீட்டைப் பற்றிப் பீத்தாமல் அவளால் இருக்க முடியுமா?’

தமிழ் பத்து யின் அர்த்தம்

பத்து

வினைச்சொல்பத்த, பத்தும், பத்தாது, பத்தாமல், பத்தாத ஆகிய வடிவங்கள் மட்டும், பத்தி

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு போதுமானதாக இருத்தல்.

  ‘நீ கொடுத்த பணம் பத்தாமல் நான் கையிலிருந்து செலவழிக்க வேண்டியதாயிற்று’
  ‘பணம் பத்தவில்லை என்றால் என்ன செய்வாய்?’
  ‘உனக்குச் சுறுசுறுப்புப் பத்தாது’

தமிழ் பத்து யின் அர்த்தம்

பத்து

வினைச்சொல்பத்த, பத்தும், பத்தாது, பத்தாமல், பத்தாத ஆகிய வடிவங்கள் மட்டும், பத்தி

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (ஆடு, மாடு முதலியவற்றை ஓர் இடத்திலிருந்து போகும்படி) விரட்டுதல்.

  ‘பயிரை மேய்ந்த மாட்டைப் பத்தினான்’

 • 2

  வட்டார வழக்கு (போ, வா என்னும் வினையோடு வரும்போது) (கால்நடைகளை) கூட்டிப்போதல்; கூட்டிவருதல்.

  ‘மாட்டைச் சந்தைக்குப் பத்திக்கொண்டுபோக வேண்டும்’

தமிழ் பத்து யின் அர்த்தம்

பத்து

பெயர்ச்சொல்

 • 1

  ஒன்பது என்ற எண்ணுக்கு அடுத்த எண்.

 • 2

  சமூக வழக்கு
  (ஒருவர் இறந்தபின்) பத்தாவது நாள் செய்யும் ஈமச் சடங்கு.

  ‘தாத்தாவுக்கு நாளை பத்து’

தமிழ் பத்து யின் அர்த்தம்

பத்து

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு மூலிகை போன்றவற்றை அரைத்து அல்லது மண் போன்றவற்றைக் குழைத்து (வலியைப் போக்க அல்லது வீக்கத்தைத் தணிக்க உடலில்) பூசுதல்.

  ‘தலைவலி தாங்க முடியாததால் சுக்குப் பத்து போட்டுக்கொண்டாள்’
  ‘மஞ்சள் பத்து வீக்கத்தை வடிக்கும்’

 • 2

  பேச்சு வழக்கு (சமையல் பாத்திரங்களில்) ஒட்டிக்கொண்டிருக்கும் உணவுப் பொருக்கு.

  ‘கழுவியும் சட்டியில் பத்து போகவில்லை’

தமிழ் பத்து யின் அர்த்தம்

பத்து

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு கட்டு.

  ‘ஒரு முறை பத்துக் கட்டியவுடன் கை நோவு எடுபட்டுவிட்டது’