பதம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பதம்1பதம்2பதம்3

பதம்1

பெயர்ச்சொல்

 • 1

  ஒன்றைச் செய்வதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் இருக்கும் ஒன்றின் குறிப்பிட்ட தன்மை அல்லது நிலை; பக்குவம்.

  ‘சோற்றைப் பதம் பார்த்து வடிக்காவிட்டால் குழைந்துவிடும்’
  ‘மாவு கையில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும் சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்’
  ‘நாற்று நடும் பதத்தில் வயலில் சேறு இருக்கிறது’

 • 2

  (கத்தி, அரிவாள்மணை முதலியவற்றில்) வெட்டுவதற்கு ஏற்ற கூர்மை.

  ‘கத்தி பதமாக இல்லை’

 • 3

  (ஆக, -ஆன) செயல், பேச்சு போன்றவற்றின் கடுமையில்லாத மிதமான தன்மை; பக்குவம்.

  ‘பதமாகப் பேசித்தான் காரியத்தைச் சாதித்துக்கொள்ள வேண்டும்’

பதம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பதம்1பதம்2பதம்3

பதம்2

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு சொல்.

  ‘செய்யுள் அடியைப் பதம்பதமாகப் பிரித்து அவர் பொருள் சொன்னார்’
  ‘பதப் பிரயோகம்’

பதம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பதம்1பதம்2பதம்3

பதம்3

பெயர்ச்சொல்

இசைத்துறை
 • 1

  இசைத்துறை
  தான் விரும்பித் தொழும் கடவுளைக் காதலனாகவும், தன்னைக் காதலியாகவும், தான் கடவுளை அடைவதற்கு உதவும் ஆசிரியரைத் தோழியாகவும் உருவகப்படுத்தி (பெரும்பாலும் தமிழில் அல்லது தெலுங்கில்) அகப்பொருளில் எழுதப்பட்டு, விளம்ப காலத்தில் பாடப்படும் ஒரு இசை வடிவம்.