தமிழ் பதவி யின் அர்த்தம்

பதவி

பெயர்ச்சொல்

 • 1

  (நிர்வாகத்தில்) அதிகாரமுள்ள பொறுப்பு/(தொழிற்சாலை, அலுவலகம் முதலியவற்றில்) மேற்பார்வையிடும் பொறுப்பைக் கொண்ட பணியிடம்.

  ‘தமிழகத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு மத்திய அரசில் அமைச்சர் பதவி தரப்பட்டிருக்கிறது’
  ‘கட்சித் தலைவர் பதவிக்குக் கடும் போட்டி நிலவுகிறது’
  ‘மொழியியல் துறைப் பேராசிரியர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன’
  ‘அவருடைய பதவிக் காலம் முடிவடைந்ததும் அவர் சொந்த ஊருக்குப் போய்விட்டார்’