பதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பதி1பதி2பதி3பதி4

பீதி1

பெயர்ச்சொல்

 • 1

  பயத்தினால் ஏற்படும் மனக் கலவரம்; கிலி.

  ‘குடிநீரில் விஷம் கலந்துவிட்டது என்ற வதந்தியினால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்’
  ‘பயங்கரவாதிகளின் திடீர்த் தாக்குதல்களினால் மக்கள் அடைந்திருக்கும் பீதியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது’
  ‘அவள் கண்களில் பீதி!’

பதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பதி1பதி2பதி3பதி4

பதி2

வினைச்சொல்பதிய, பதிந்து, பதிக்க, பதித்து

 • 1

  (ஒன்று ஒரு பரப்பில்) உட்செல்லுதல்; அழுந்துதல்.

  ‘பாதம் பதியும் அளவுக்கு நிலத்தில் ஈரம் இருந்தது’
  ‘மணலில் சக்கரம் பதிந்துகொண்டதால் மாடுகள் வண்டியை இழுக்கச் சிரமப்பட்டன’

 • 2

  (அச்சு, முத்திரை முதலியவை ஒன்றில்) அழுந்துதல்; படிதல்.

  ‘இந்தப் பக்கத்தில் மட்டும் அச்சு நன்றாகப் பதியவில்லை’
  ‘உதடுகள் நெற்றியில் பதிய முத்தமிட்டான்’

 • 3

  (காட்சி, செய்தி முதலியவை மனத்தில்) நிலைத்தல்.

  ‘எங்கள் ஆசிரியர் மனத்தில் பதியும்படி விளக்கமாகப் பாடம் நடத்துவார்’
  ‘படத்தில் அந்தக் காட்சி ஒரு நிமிட நேரம் மட்டுமே வந்தது என்றாலும் மனத்தில் பதிந்துவிட்டது’

 • 4

  (பார்வை ஒன்றில்) நிலையாகப் படிதல்; நிலைத்தல்.

  ‘அவன் பார்வை அவள் கழுத்துச் சங்கிலியில் பதிந்தது’

 • 5

  (பெயர் அல்லது பத்திரம்) பதிவுசெய்தல்.

  ‘வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பெயரைப் பதிந்துவிட்டு வந்திருக்கிறேன்’
  ‘பத்திரம் பதிய உன் உதவி தேவை’

பதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பதி1பதி2பதி3பதி4

பதி3

வினைச்சொல்பதிய, பதிந்து, பதிக்க, பதித்து

 • 1

  (ஒன்று ஒரு பரப்பில்) உட்செல்லும்படி செய்தல்; பதிந்திருக்குமாறு செய்தல்.

  ‘சலவைக் கல் பதித்த சுவர்’
  ‘கல் பதித்த தோடு’

 • 2

  (அச்சு, முத்திரை முதலியவற்றை) பதியும்படி அழுத்துதல்.

  ‘தகட்டில் உலோக அச்சைக் கொண்டு முத்திரை பதித்தார்கள்’

 • 3

  (பார்வையை ஒன்றில்) நிலையாகப் படியச் செய்தல்; நிலைக்கச் செய்தல்.

  ‘அவள் அந்தப் படத்தில் பதித்த பார்வையை வெகு நேரம்வரை விலக்கவே இல்லை’

பதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பதி1பதி2பதி3பதி4

பதி4

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு கணவன்.

 • 2

  தத்துவம்
  உயர் வழக்கு (சைவ சித்தாந்தத்தில்) இறைவன்.

பதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பதி1பதி2பதி3பதி4

பதி

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (புராதனமான கோயில்களைக் கொண்டுள்ள) ஊர்.

  ‘பழம் பதிகளுள் ஒன்று மதுரை’
  ‘ஞானசம்பந்தர் திருநீற்றுப் பதிகம் பாடிய பதி இதுதான்’