தமிழ் பதிப்பி யின் அர்த்தம்

பதிப்பி

வினைச்சொல்பதிப்பிக்க, பதிப்பித்து

  • 1

    (புத்தகம், பத்திரிகை முதலியவற்றை) ஒழுங்குபடுத்தி வெளியிடுதல்/(புத்தகம், பத்திரிகை முதலியவற்றை) வெளியிடுதல்.

    ‘இந்த நூலை முதலில் பதிப்பித்தவர் பெயர் இந்தப் பதிப்பில் விடுபட்டிருக்கிறது’
    ‘நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்த நிறுவனம் இது’