தமிழ் பதிப்பு யின் அர்த்தம்

பதிப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (புத்தகம் முதலியவற்றின் பிரதிகள்) விற்பனைக்காக ஒரு முறை குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளியிடப்படுவது.

  ‘புத்தகத்தின் முதல் பதிப்பில் இருந்த பல தவறுகள் இரண்டாம் பதிப்பில் நீக்கப்பட்டுவிட்டன’
  ‘பல பதிப்புகள் வெளியான சிறந்த நாவல் இது’

 • 2

  (ஒரே செய்தித்தாள் பல இடங்களிலிருந்து அச்சிட்டு வெளியிடப்படும்போது) ஓர் இடத்திலிருந்து வெளிவரும் வெளியீடு.

  ‘அந்தப் பத்திரிகையின் கோவைப் பதிப்பு மீண்டும் வெளிவரத் துவங்கியது’
  ‘மதுரைப் பதிப்பு’

 • 3

  (பெரும்பாலும் பன்மையில்) (குறிப்பிட்ட பதிப்பாளர்களின்) வெளியீடு.

  ‘அனைத்து வெளியீட்டாளர்களின் பதிப்புகளும் எங்களிடம் கிடைக்கும்’

 • 4

  (புத்தகம்) குறிப்பிட்ட வடிவத்தில் அல்லது குறிப்பிட்ட நோக்கத்துக்காக வெளியிடப்படுவது.

  ‘கெட்டி அட்டைப் பதிப்பு’
  ‘‘ஒரு புளியமரத்தின் கதை’ என்ற நாவல் மாணவர் பதிப்பாக வெளிவந்திருக்கிறது’

 • 5

  (குறிப்பிட்டவரால்) பதிப்பிக்கப்பட்டது.

  ‘மர்ரே ராஜம் பதிப்பில் பாடம் சந்தி பிரிக்கப்பட்டிருக்கும்’
  ‘சாமிநாதைய்யரின் ‘குறுந்தொகை’ பதிப்பு உங்களிடம் இருக்கிறதா?’

 • 6

  (மென்பொருளைக் குறிப்பிடும்போது) முன்பு வெளியிடப்பட்டதிலிருந்து மாறுபட்டது.

  ‘ஆபீஸ் 2000 பதிப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன’
  ‘பேஜ்மேக்கரின் பழைய பதிப்புதான் என்னிடம் உள்ளது’