தமிழ் பதில் யின் அர்த்தம்

பதில்

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  கேள்வி, வேண்டுகோள் முதலியவற்றுக்கு விபரம், விளக்கம், ஒப்புதல் என்ற வகையில் எழுத்துமூலமாகவோ பேச்சுமூலமாகவோ தரப்படுவது; விடை.

  ‘ஏன் அப்படிச் செய்தாய் என்று கேட்டதற்கு அவன் பதிலே சொல்லவில்லை’
  ‘தேர்வில் பதில் தெரியாமல் பல கேள்விகளை விட்டுவிட்டான்’
  ‘கடன் கேட்டு வங்கிக்கு விண்ணப்பித்திருக்கிறேன். இன்றுவரை பதில் இல்லை’
  ‘இந்த ஆண்டாவது எங்கள் கிராமத்துக்குச் சாலை போடப்படுமா என்ற கேள்விக்கு மாவட்ட ஆட்சியர்தான் பதில் சொல்ல வேண்டும்’
  ‘நான் எழுதிய கட்டுரை சார்ந்த எந்தக் கேள்விக்கும் பதில் தர நான் தயார்’
  ‘ஆன்மீகம் பற்றிய உன் கேள்விகளுக்கு நீதான் பதில் காண வேண்டும்’

 • 2

  ஒருவர் எழுதிய கடிதம் குறித்து மற்றொருவர் அனுப்பும் மறுமொழி.

  ‘நான் போட்ட கடிதத்துக்கு நீ ஏன் பதில் போடவில்லை?’
  ‘உனது பதில் கிடைக்கப்பெற்றேன். மற்றவை நேரில்’

 • 3

  (ஒரு செயலுக்கு அல்லது பேச்சுக்கு எதிர்விளைவாக) திரும்பச் செய்யப்படுவது.

  ‘இதற்கு பதில் நடவடிக்கை எடுக்காமல் விடப்போவதில்லை’
  ‘அவர் அளித்த விருந்துக்கு பதில் விருந்து இவர் வீட்டில் நடந்தது’
  ‘பதிலுக்குத் திட்டாமல் இருந்துவிட்டேன்’

தமிழ் பதில் யின் அர்த்தம்

பதில்

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  (ஒன்றின் இடத்தில் மற்றொன்று அல்லது ஒருவர் இடத்தில் மற்றொருவர் என்பதைக் குறித்து வரும்போது) மாறாக அல்லது பிரதியாக இருப்பது.

  ‘லாபம் வருவதற்குப் பதில் நஷ்டம்தான் வருகிறது’
  ‘தோசைக்குப் பதில் இட்லி’