தமிழ் பதை யின் அர்த்தம்

பதை

வினைச்சொல்பதைக்க, பதைத்து

  • 1

    (துன்பம் தாங்க முடியாமல் அல்லது எதிர்பாராத பாதிப்பால்) பொறுக்க முடியாமல் தவித்தல்; துடித்தல்; பதறுதல்; நடுங்குதல்.

    ‘கணவன் விபத்தில் இறந்த செய்தி கேட்டதும் பதைத்துப்போனாள்’
    ‘கண் முன்னே நடந்த விபத்தை நினைத்தாலே மனம் பதைக்கிறது’