பத்திரம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பத்திரம்1பத்திரம்2

பத்திரம்1

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  முத்திரைத்தாளில் கிரயம், ஒப்பந்தம், பாகப்பிரிவினை, உயில் போன்றவை பதிவுசெய்யப்பட்ட ஆவணம்.

  ‘நிலத்தின் பரப்பைப் பத்திரத்தில் பார்த்துத் தெரிந்துகொண்டேன்’
  ‘வீட்டுப் பத்திரத்தை எங்கே வைத்திருக்கிறாய்?’

 • 2

  முத்திரைத்தாள்.

  ‘ஆயிரம் ரூபாய்ப் பத்திரம் இரண்டு கொடுங்கள்’

 • 3

  (முதலீடாக, சேமிப்பாக அல்லது கடனாகக் கொடுத்த) பணத்துக்கு அரசு தரும் அச்சடிக்கப்பட்ட சான்று.

  ‘ஐந்தாண்டு காலச் சிறுசேமிப்புப் பத்திரங்கள்’
  ‘கடன் பத்திரங்களின் மூலம் நிதி திரட்ட அரசு முடிவுசெய்துள்ளது’

 • 4

  அருகிவரும் வழக்கு (ஒரு விழாவில் ஒருவரைக் கௌரவிக்கும் வகையில் அளிக்கப்படும்) பாராட்டு வாசகங்கள் அடங்கிய தாள்.

  ‘விழாவில் கவிஞருக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்து அளிக்கப்பட்டது’

பத்திரம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பத்திரம்1பத்திரம்2

பத்திரம்2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  இழப்பு, சேதம் அல்லது ஆபத்து ஏற்படாத வகையிலான பாதுகாப்பு.

  ‘அப்பா தந்த பணத்தைப் பத்திரமாகப் பெட்டியில் வைத்துப் பூட்டினாள்’
  ‘என் கவலையெல்லாம் நீ பத்திரமாக ஊர் போய்ச் சேர வேண்டும் என்பதே’
  ‘பத்திரமான இடத்தில்தான் நகைகளை வைத்திருக்கிறேன்’

 • 2

  (இழப்பு, சேதம் அல்லது ஆபத்தைத் தடுக்கும் வகையிலான) கவனம்; ஜாக்கிரதை.

  ‘வேலையிலிருந்து திரும்பும்வரை குழந்தையைப் பாட்டி பத்திரமாகப் பார்த்துக்கொள்வாள்’
  ‘கத்தி கூராக இருக்கிறது, கை பத்திரம்’