தமிழ் பந்தயம் யின் அர்த்தம்

பந்தயம்

பெயர்ச்சொல்

 • 1

  (விளையாட்டு போன்றவற்றில்) பலர் கலந்துகொள்வதாகவும் ஒருவர் வெற்றி பெறுவதாகவும் அமையும் நிகழ்ச்சி; போட்டி.

  ‘ஒலிம்பிக் பந்தயம்’
  ‘யார் அதிகமாக இட்லி சாப்பிடுகிறார்கள் என்று ஒரு பந்தயம் நடத்தினார்கள்’

 • 2

  ஒன்றைக் குறித்த முடிவு இவ்வாறுதான் இருக்கும் என்று வெவ்வேறு கருத்துக் கூறுவோர் இடையே பணம் கட்டியோ பொருள்களை ஈடாக வைத்தோ நடக்கும் போட்டி.

  ‘இந்த வேலை உனக்குக் கிடைக்காது, என்ன பந்தயம்?’