தமிழ் பந்தல் யின் அர்த்தம்

பந்தல்

பெயர்ச்சொல்

 • 1

  (திருமணம், இறப்பு போன்ற சடங்குகள், பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்காக அல்லது நிழலுக்காக) கழிகளை நட்டுக் கீற்றுகளைப் போட்டு உருவாக்கும் அமைப்பு.

  ‘தன் பெண்ணின் திருமணத்திற்காக ஆயிரம் பேர் உட்காரக்கூடிய பந்தல் போட்டிருக்கிறார்’
  ‘கட்சி மாநாட்டுக்காகத் திருச்சியில் பிரமாண்டமான பந்தல் போடப்பட்டுவருகிறது’
  ‘கோடைக் காலத்தில் அவர் வீட்டு வாசலின் முன்பு பெரிய பந்தல் போடப்பட்டிருக்கும்’

 • 2

  (கொடி படருவதற்கு ஏற்ற வகையில்) கால்களை நட்டு அதன் மேல் குறுக்கும் நெடுக்குமாகக் கழிகளைக் கட்டிய அமைப்பு.

  ‘மல்லிகைப் பந்தல்’
  ‘அவரைப் பந்தல்’