தமிழ் பந்தாடு யின் அர்த்தம்

பந்தாடு

வினைச்சொல்-ஆட, -ஆடி

 • 1

  (ஒருவரை) ஒன்றிலும் நிலைக்கவிடாமல் அலைக்கழித்தல்.

  ‘மூன்று வருடங்களில் நான்கு இடமாற்றங்கள் என்று இந்த அதிகாரியைப் பந்தாடுகிறார்கள்’
  ‘நான்கு மகன்களில் ஒருவர் கூடப் பெற்றோரை வைத்துக்கொள்ளாமல் இப்படிப் பந்தாடுகிறார்களே!’

 • 2

  (ஒருவரை) செம்மையாக அடித்து உதைத்தல்.

  ‘தனியே நின்றிருந்த பெண்ணிடம் குறும்பு செய்த ரௌடிகளைக் கல்லூரி மாணவர்கள் பந்தாடிவிட்டனர்’