தமிழ் பந்து யின் அர்த்தம்

பந்து

பெயர்ச்சொல்

 • 1

  (பெரும்பாலும்) ரப்பரால் ஆன (கீழே போட்டால் எழும்பக்கூடிய) உருண்டை வடிவ விளையாட்டுச் சாதனம்.

 • 2

  (பூ, நூல் போன்றவற்றைக் குறிக்கும்போது) உருண்டை வடிவில் சுற்றிவைக்கப்பட்டது.

  ‘மேடையை அலங்கரிக்க மூன்று பந்து பூ வேண்டும்’

 • 3

  (கிரிக்கெட்டில்) பந்துவீச்சில் ஒரு முறை வீசப்படும் பந்து.

  ‘தனக்கு வீசப்பட்ட பந்துகளை அவர் மைதானத்தின் நான்கு திசைகளிலும் விரட்டினார்’
  ‘சோயப் அக்தரின் பந்தை அடித்து விளையாட நிறைய திறமை வேண்டும்’

தமிழ் பந்து யின் அர்த்தம்

பந்து

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு (பெரும்பாலும் பன்மையில்) உறவினர்.

  ‘அவனுக்குப் பெற்றோரோ நெருங்கிய பந்துக்களோ இல்லை’

உச்சரிப்பு

பந்து

/(b-)/