பந்தம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பந்தம்1பந்தம்2

பந்தம்1

பெயர்ச்சொல்

 • 1

  நுனியில் துணி சுற்றப்பட்டு எண்ணெயில் முக்கியெடுத்த, எரிப்பதற்கு வசதியான கம்பு; தீப்பந்தம்; தீவட்டி.

  ‘சுவாமி ஊர்வலத்தில் பலர் பந்தம் பிடித்து வந்தார்கள்’
  ‘இந்த இரவு நேரத்தில் பந்தத்தை வைத்துக்கொண்டு ஆற்றங்கரையில் என்ன தேடுகிறார்கள்?’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு (இறந்தவரின் சிதைக்குக் கொள்ளிவைப்பதற்கான) நெய்ப் பந்தம்.

  ‘குமருப்பிள்ளைகள் எல்லாம் அப்பப்பாவுக்குப் பந்தம் பிடிக்க வாருங்கள்’

பந்தம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பந்தம்1பந்தம்2

பந்தம்2

பெயர்ச்சொல்

 • 1

  உறவு.

  ‘அம்மா இறந்த பிறகு தாய்வழி பந்தம் அறுந்துவிட்டது’
  ‘பந்த பாசம் எதுவும் இல்லை’
  ‘திருமண பந்தம்’

உச்சரிப்பு

பந்தம்

/(b-)/