தமிழ் பயங்கரம் யின் அர்த்தம்

பயங்கரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  அழிவு, ஆபத்து, மிகுந்த பயம் போன்றவற்றை ஏற்படுத்தும் தன்மையை உடையது.

  ‘பயங்கரக் காட்சிகள் நிறைந்த படம்’
  ‘இரு கோஷ்டியினரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாகத் தாக்கிக்கொண்டார்கள்’
  ‘ஈட்டி, வீச்சரிவாள் போன்ற பயங்கரமான ஆயுதங்கள் வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது’

 • 2

  (பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய) ஒன்றின் அளவு மிகுதியை உணர்த்தும் சொல்.

  ‘நகரில் விஷ ஜுரம் பயங்கரமாகப் பரவிவருகிறது’
  ‘பயங்கர வேகத்தில் செல்வதே பல விபத்துகளுக்குக் காரணமாகும்’
  ‘பயங்கரமான காற்று’
  ‘இன்று வெயில் பயங்கரம்’