தமிழ் பயன் யின் அர்த்தம்

பயன்

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  (ஒருவரால் அல்லது ஒரு செயலைச் செய்வதால் விளையும்) சாதகமான விளைவு; நன்மை; பலன்.

  ‘இந்தப் புதிய திட்டத்தின் பயனாக ஏழைகளுக்கு இலவசமாக வீடு கிடைத்தது’
  ‘அவருடைய முயற்சியின் பயனாக ஊருக்குப் பள்ளிக்கூடம் வந்தது’
  ‘நான் அவனுடன் பேசுவதால் ஏதேனும் பயன் உண்டா?’
  ‘காய்கறிகளை நிறையச் சாப்பிடுவதால் பல பயன்கள் உள்ளன’