தமிழ் பயம் யின் அர்த்தம்

பயம்

பெயர்ச்சொல்

 • 1

  கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்பதால் ஏற்படும் உணர்வு; அச்சம்.

  ‘தனது திருட்டு வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தால் அவனுக்கு வியர்த்துக் கொட்டியது’
  ‘குழந்தைக்குக் கரப்பான்பூச்சியைக் கண்டால் பயம்’
  ‘அவளுக்கு என்னிடம் பேசவே பயம்’
  ‘பயமே இல்லாமல் லஞ்சம் வாங்குகிறார்களே!’
  ‘தலைமை ஆசிரியரிடம்தான் மாணவர்களுக்குப் பயம் இருக்கிறது’