தமிழ் பயல் யின் அர்த்தம்

பயல்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு சிறுவனைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொல்.

  ‘அந்தக் குட்டிப் பயலை எங்கே காணோம்?’
  ‘இந்தப் பயல் இன்னும் பள்ளிக்கூடம் போகவில்லையா?’
  ‘அந்தப் பயலைக் கடைக்கு அனுப்பினேன்; இன்னும் வரவில்லை’

 • 2

  பேச்சு வழக்கு மரியாதையற்ற விதத்தில் ஓர் ஆணைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல்.

  ‘அயோக்கியப் பயல்’
  ‘திருட்டுப் பயல்’
  ‘எந்தப் பயலுக்கு என்னை எதிர்க்கும் துணிவு இருக்கிறது?’