தமிழ் பயிற்சியாளர் யின் அர்த்தம்

பயிற்சியாளர்

பெயர்ச்சொல்

 • 1

  (குறிப்பிட்ட பணி, விளையாட்டு, கலை போன்றவற்றுக்குத் தேவையான) பயிற்சியை அளிப்பவர்.

  ‘ஓட்டப் பந்தய வீராங்கனை தனக்கென ஒரு பயிற்சியாளரை நியமித்துக்கொண்டுள்ளார்’
  ‘கொலை நடந்த இடத்துக்கு மோப்ப நாயுடன் அதன் பயிற்சியாளரும் வந்திருந்தார்’

 • 2

  பயிற்சி பெறுபவர்.

  ‘நாடகப் பட்டறையில் கலந்துகொண்ட பயிற்சியாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது’