தமிழ் பரக்க யின் அர்த்தம்

பரக்க

வினையடை

 • 1

  உயர் வழக்கு ஓர் இடத்தில் மட்டும் அல்லாமல் பல இடங்களில்; பெருமளவில்; பரவலாக.

  ‘பெண்ணுரிமைக் கருத்துகளை இவருடைய கவிதைகள் முழுதும் பரக்கக் காணலாம்’

 • 2

  வட்டார வழக்கு இடத்தை நிரப்பி இருக்கும்படி; பரப்பி.

  ‘ஏன் கூடத்தில் சாமான்களைப் பரக்க வைத்திருக்கிறாய்?’
  ‘காலைப் பரக்க விரித்துப் படுத்திருந்தான்’