தமிழ் பரீட்சார்த்தம் யின் அர்த்தம்

பரீட்சார்த்தம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு (பெருமளவில் மேற்கொள்ளவிருக்கும் திட்டத்தின் குறைநிறைகளை அறிந்துகொள்வதற்காக முதலில்) சிறிய அளவில் செயல்படுத்திப் பார்க்கும் சோதனை முயற்சி.

  ‘இந்த மாதக் கடைசியில் சர்க்கரை ஆலையில் பரீட்சார்த்த உற்பத்தி தொடங்கிவிடும்’
  ‘கூட்டுறவு அங்காடி வீட்டுக்கு வீடு பொருள்களை விநியோகம் செய்யும் முறையைப் பரீட்சார்த்தமாக மேற்கொண்டுள்ளது’

 • 2

  அருகிவரும் வழக்கு (கலைப் படைப்பில் மேற்கொள்ளும்) சோதனை முயற்சி.

  ‘பரீட்சார்த்தத் திரைப்படங்கள் சில சமயங்களில்தான் வெற்றி பெறுகின்றன’