தமிழ் பரபர யின் அர்த்தம்

பரபர

வினைச்சொல்பரபரக்க, பரபரத்து

 • 1

  (செயல்படுவதில்) நிதானம் இழந்து அவசரப்படுதல்.

  ‘‘ரயில் கிளம்புவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. அதற்குள் ஏன் பரபரக்கிறாய்?’’

 • 2

  (மனம் அல்லது கை, கால்) துருதுருத்தல்; துடித்தல்.

  ‘பிறந்த குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று மனம் பரபரத்தது’
  ‘அங்கிருந்து ஓடிப்போய்விட வேண்டுமென்று கால்கள் பரபரத்தன’