தமிழ் பரபரப்பு யின் அர்த்தம்

பரபரப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (எதிர்பார்ப்பு, மகிழ்ச்சி போன்றவற்றால் மனத்தில் அல்லது செயலில் தோன்றும்) நிதானம் இழந்த நிலை.

  ‘அவன் ஊருக்குச் செல்லும் மகிழ்ச்சியில் ஒரே பரபரப்பாக இருந்தான்’
  ‘கடிதத்தைப் பிரித்துப் பரபரப்புடன் படித்தாள்’
  ‘துப்பறியும் கதை படிக்கும்போது உள்ளத்தில் கட்டுக்கடங்காத பரபரப்பு ஏற்படுகிறது’

 • 2

  (பலரின்) கவனத்தை ஈர்த்து ஆர்வத்தைத் தூண்டும் நிலை.

  ‘இந்த ஊழல் புகார் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது’
  ‘பரபரப்பான செய்திகளை வெளியிடும் ஒரே பத்திரிகை இதுதான்’