பரப்பு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பரப்பு1பரப்பு2

பரப்பு1

வினைச்சொல்பரப்ப, பரப்பி

 • 1

  (பல இடங்களுக்கும் போகச் செய்தல் அல்லது பலரையும் அடையச் செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (ஒரு செய்தி, கொள்கை, சிந்தனை போன்றவற்றை) பலரும் அறிந்துகொள்ளும் வகையிலோ ஏற்றுக்கொள்ளும் வகையிலோ பரவச் செய்தல்

   ‘இப்படியொரு விஷமத்தனமான செய்தியைப் பரப்பியவர் யார்?’
   ‘வீணாக வதந்திகளைப் பரப்பிக்கொண்டிருக்காதீர்கள்’
   ‘தலைவரின் புகழைப் பரப்புவதையே தொண்டர்கள் சேவையாகக் கருதுகிறார்கள்’
   ‘இயேசுவின் சீடர்கள் உலகம் முழுதும் கிறித்தவ மதத்தைப் பரப்பினார்கள்’

  2. 1.2 (நோயைப் பலருக்கும்) தொற்றச் செய்தல்

   ‘கண்ட இடத்தில் எச்சிலைத் துப்புவது நோயைப் பரப்பும்’
   ‘பறவைக் காய்ச்சலைப் பரப்புவதில் வலசை வரும் பறவைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன’

  3. 1.3 (மணம், ஒளி முதலியவற்றை ஒரு இடத்தில்) பரவச் செய்தல்

   ‘மணம் பரப்பும் மலர்த் தோட்டம்’
   ‘கடலில் நிலவு தன் வெண்ணிறக் கதிர்களைப் பரப்பியிருந்தது’

 • 2

  (ஓர் இடத்தில் பரவி நிறையச் செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 ஒரு இடத்தின் மேல் பொருள்களைக் குவியலாக வைக்காமல் அந்த இடம் முழுவதும் விரவி இருக்குமாறு வைத்தல்

   ‘வைக்கோலைப் பரப்பிவைத்தால்தான் சீக்கிரம் காயும்’
   ‘புத்தகங்களை மேஜையில் பரப்பியிருந்தான்’

  2. 2.2 (கை, கால் மற்றும் சிறகை) விரித்தல்; பரத்துதல்

   ‘காலைப் பரப்பிக் கொண்டு உட்கார்ந்திருந்தான்’
   ‘சிறகைப் பரப்பிச் செத்துக்கிடந்தது பறவை’

பரப்பு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பரப்பு1பரப்பு2

பரப்பு2

பெயர்ச்சொல்

 • 1

  (முப்பரிமாணம் கொண்ட பொருளின்) வெளிப்பகுதி; (திரவம்) பரவியிருக்கும் நிலையின் மேல் பகுதி.

  ‘மேஜையின் மேல்பரப்பு’
  ‘நீர்ப் பரப்பு’
  ‘இந்தக் கண்ணாடி குவிந்த பரப்பை உடையது’

 • 2

  பரப்பளவு.

  ‘சகாராப் பாலைவனத்தின் பரப்பு தார் பாலைவனத்தின் பரப்பைவிட பல மடங்கு அதிகம்’
  உரு வழக்கு ‘தமிழ் இலக்கியத்தின் பரப்பை நன்கு அறிந்தவர்’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு நிலத்தைக் கணக்கிடுவதற்கான ஓர் அளவு.

  ‘உனக்கு எத்தனை பரப்புக் காணி சீதனமாகத் தந்தார்கள்?’
  ‘வீட்டுக் காணியில் 18 பரப்பு என்பது ஒரு ஏக்கர்’
  ‘வயல் காணியில் 24 பரப்பு என்பது ஒரு ஏக்கர்’
  ‘எத்தனை பரப்புக் காணியில் உன் வீடு உள்ளது?’