தமிழ் பரம யின் அர்த்தம்

பரம

பெயரடை

 • 1

  தொடர்ந்து வரும் பெயர்ச்சொல் குறிக்கும் தன்மையை மிகுவிக்கும் முறையில் பயன்படுத்தும் அடை.

  ‘இந்த விஷயம் பரம ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது’
  ‘ஏற்பாடு பரம திருப்தியாக இருந்தது’
  ‘உங்களது பரம ரசிகர்’
  ‘அவர் பரம ஏழை’
  ‘அவன் என்னுடைய பரம எதிரி’

தமிழ் பரம் யின் அர்த்தம்

பரம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு மேலுலகம்.

  ‘ஆன்மீக நெறி இகத்துக்கும் பரத்துக்கும் நன்மை தரும் என்பது சமயப் பெரியோரின் நம்பிக்கை’