தமிழ் பரமபதம் யின் அர்த்தம்

பரமபதம்

பெயர்ச்சொல்

  • 1

    (வைணவ வழக்கில்) மோட்சம்; சொர்க்கம்.

    ‘அவர் பரமபதம் சேர்ந்தார்’

  • 2

    கட்டங்கள் அச்சிடப்பட்ட அட்டையில் தாயக் கட்டையின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி காயை நகர்த்திக் கட்டத்தில் காட்டப்பட்டுள்ள ஏணி வழியாக மேல் வரிசைக்குச் செல்வது அல்லது பாம்பு வழியாகக் கீழ் வரிசைக்கு இறங்குவது என்ற முறையில் விளையாடி இறுதியில் சொர்க்கப் பதவி என்னும் கட்டத்தை அடையும் விளையாட்டு.