தமிழ் பரம்பரை யின் அர்த்தம்
பரம்பரை
பெயர்ச்சொல்-ஆக, -ஆன
- 1
(காலம்காலமாக) தொடர்ந்து வரும் சந்ததி; தலைமுறை; வம்சம்.
‘இவர் இந்தக் கோயிலின் பரம்பரை அர்ச்சகர்’‘சில பழக்கங்கள் பரம்பரையாக வருபவை’ - 2
(பெயரடையாக வரும்போது) தலைமுறைதலைமுறையாகத் தொடர்ந்து வருவது.
‘தொழுநோய் பரம்பரை வியாதி அல்ல’‘இருவருமே பரம்பரை எதிரிகள்’‘விவசாயம்தான் எங்கள் பரம்பரைத் தொழில்’ - 3
ஒரு குருவை அல்லது ஒரு துறையின் முன்னோடியைப் பின்பற்றுபவர்களின் வரிசை.
‘இவர் பாரதிதாசன் பரம்பரையைச் சேர்ந்த கவிஞர்’