பரவல் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பரவல்1பரவல்2

பரவல்1

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒன்று பல இடங்களில் அல்லது பலரிடையே) பரவிக் காணப்படும் நிலை.

  ‘இந்தியாவில் மக்கள்தொகைப் பரவல் சீராக இல்லை’
  ‘அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம்’
  ‘தொலைபேசி போன்ற தகவல்தொடர்பு சாதனங்களின் கண்டுபிடிப்புக்குப் பிறகு செய்திப் பரவல் வெகு வேகமாக நடைபெற்றுவருகிறது’
  ‘தலித் மக்களின் எழுச்சிக்கு அம்பேத்கரின் சிந்தனைப் பரவலை முக்கியக் காரணமாகக் கூறலாம்’

பரவல் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பரவல்1பரவல்2

பரவல்2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (நீர்நிலையின்) கரையோரப் பகுதி.

  ‘நீரின் ஓட்டத்தில் இல்லாமல் பரவலில்தான் இறால் முட்டையிடும்’