தமிழ் பரவாயில்லை யின் அர்த்தம்

பரவாயில்லை

வினைச்சொல்

 • 1

  ‘ஒன்று தவறாகவோ ஒருவர் எதிர்பாராத வகையிலோ இருந்தாலும் அதைப் பொருட்படுத்தத் தேவையில்லை’ என்ற பொருளில் பயன்படுத்தும் சொல்.

  ‘காப்பி கீழே சிந்தி விட்டதே! பரவாயில்லை, துடைத்துவிடலாம்’

 • 2

  மோசமில்லை; தேவலை.

  ‘படிப்பில் அண்ணனைவிடத் தம்பி பரவாயில்லை’
  ‘சிகிச்சைக்குப் பிறகு உடம்பு கொஞ்சம் பரவாயில்லை’

 • 3

  குறைவாக மதிப்பிடப்பட்டவரின் செயல் எதிர்பார்த்த அளவுக்கு மோசமாக இல்லாதபோது பாராட்டும் வகையில் பயன்படுத்தும் சொல்.

  ‘நீகூட வீடு வாங்கிவிட்டாயா, பரவாயில்லையே!’
  ‘பரவாயில்லை, நீ பிழைத்துக்கொள்வாய்’