பரஸ்பரம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பரஸ்பரம்1பரஸ்பரம்2

பரஸ்பரம்1

பெயர்ச்சொல்

 • 1

  (பெரும்பாலும் பெயரடையாக) ஓர் உணர்வு, நடவடிக்கை, விளைவு போன்றவை சம்பந்தப்பட்ட இருவருக்கு அல்லது இரண்டுக்குப் பொதுவானதாக அமைவது.

  ‘பரஸ்பர அன்பினால் மட்டுமே உறவுகள் வளரும்’
  ‘பங்குதாரர்களிடையே பரஸ்பர திருப்தி இருந்தால்தான் தொடர்ந்து வியாபாரம் செய்ய முடியும்’
  ‘பரஸ்பர சந்திப்பின்போது இரு நாட்டுப் பிரச்சினைகளையும் பற்றித் தலைவர்கள் விவாதித்தனர்’

பரஸ்பரம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பரஸ்பரம்1பரஸ்பரம்2

பரஸ்பரம்2

வினையடை

 • 1

  ஒன்றின் விளைவு, சம்பந்தப்பட்ட இருவரிடமும் அல்லது அனைவரிடமும் சேரும்படி; (நாடு, நிறுவனம் முதலியவை) தங்களுக்குள்ளாக.

  ‘கட்சியின் இரு கோஷ்டியினரும் பரஸ்பரம் தாக்கிக்கொண்டனர்’
  ‘கணவன் மனைவி பரஸ்பரம் விட்டுக்கொடுத்தல் அவசியம்’
  ‘எங்காவது வழியில் சந்திக்கும்போது பரஸ்பரம் விசாரித்துக்கொள்வதோடு சரி’
  ‘உலகின் எந்தக் கோடியில் வசித்தாலும் பரஸ்பரம் தொடர்புகொள்ள நவீனத் தகவல்தொடர்புச் சாதனங்கள் உதவுகின்றன’