தமிழ் பராமரி யின் அர்த்தம்

பராமரி

வினைச்சொல்பராமரிக்க, பராமரித்து

 • 1

  (ஒன்று அல்லது ஒருவர் நல்ல நிலையில் இருக்கத் தேவையானவற்றைச் செய்து) கவனித்துக்கொள்ளுதல்; ஆதரித்தல்.

  ‘வயதான தந்தையை வீட்டில் வைத்துப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு அவனுக்கு இருந்தது’
  ‘கால்நடைகளைப் பராமரிக்கத் தெரியாததால் பெரும் நஷ்டத்துக்கு உள்ளானார்’
  ‘பெரிய வீட்டைச் சரிவரப் பராமரிக்காமல்விட்டதால் பழுதாகிவிட்டது’

 • 2

  முறையாகவும் சீராகவும் இருக்கும் விதத்தில் ஒன்றைப் பார்த்துக்கொள்ளுதல்; பேணுதல்.

  ‘கடைக் கணக்குகளைப் பராமரிக்க ஆள் வேண்டும்’
  ‘சட்டம், ஒழுங்கைப் பராமரிப்பது அரசின் முதல் கடமை’