தமிழ் பரிகாரம் யின் அர்த்தம்

பரிகாரம்

பெயர்ச்சொல்

 • 1

  தீர்வு.

  ‘தொழிலாளர் பிரச்சினைக்கு ஒரே பரிகாரம் தொழிற்சங்கமும் நிர்வாகமும் கூடிப் பேசுவதுதான்’
  ‘இந்த ஒப்பந்தம் எல்லைப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரப் பரிகாரமாக அமையும்’

 • 2

  (பாவம், தோஷம் போன்றவை) நீங்குவதற்காக மேற்கொள்ளும் வழிமுறை; நிவர்த்தி.

  ‘உன் ஜாதகத்தில் இருக்கும் செவ்வாய் தோஷம் நீங்கப் பரிகாரம் செய்ய வேண்டும்’

 • 3

  அருகிவரும் வழக்கு (நோயைத் தீர்ப்பதற்கான) வழிமுறை.

  ‘‘தீராத வயிற்றுவலிக்குப் பரிகாரம் உண்டா’ என்று அவர் கேட்டார்’