தமிழ் பரிசீலனை யின் அர்த்தம்

பரிசீலனை

பெயர்ச்சொல்

  • 1

    (திட்டம் போன்றவற்றைச் செயல்படுத்துவதற்காக அல்லது கோரிக்கை, விண்ணப்பம் முதலியவற்றை ஏற்றுக்கொள்வதற்காக அவற்றின் அம்சங்களை, கூறுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு) முடிவெடுப்பதற்காகச் செய்யும் ஆய்வு.

    ‘பாலம் கட்டும் திட்டம் பரிசீலனையில்தான் உள்ளது’
    ‘தங்களுடைய வேலைக்கான விண்ணப்பம் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு வைக்கப்பட்டுள்ளது’