தமிழ் பரிசு யின் அர்த்தம்

பரிசு

பெயர்ச்சொல்

 • 1

  வெற்றி பெற்றதற்காக அல்லது ஒரு துறையில் சிறப்பாகச் செயல்பட்டதற்காகச் சிறப்பிக்கும் முறையில் பணமாகவோ பொருளாகவோ வழங்கப்படுவது.

  ‘ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்றவருக்கு ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது’
  ‘நோபல் பரிசு பெற்ற இந்தியர்’
  ‘12ஆம் வகுப்பில் மாநிலத்திலேயே முதலாவதாக வந்த மாணவன் முதலமைச்சரிடம் பரிசு பெற்றான்’
  ‘உலகக் கோப்பைக் கால்பந்து போட்டித் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய வீரருக்குத் தங்கப் பந்து பரிசாக வழங்கப்பட்டது’

 • 2

  (குலுக்கல் முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவருக்குக் கொடுக்கப்படும்) பணம்.

  ‘பரிசுச்சீட்டை வாங்கிவைத்துக்கொண்டு பரிசு விழாதா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறான்’

 • 3

  அன்பளிப்பு.

  ‘மணமேடையில் திருமணப் பரிசுகள் வந்து குவிந்தன’
  ‘பரிசுப் பொருள் விற்பனைக்கு என்றே தனிக் கடைகள் இருக்கின்றன’