தமிழ் பரிசோதனை யின் அர்த்தம்

பரிசோதனை

பெயர்ச்சொல்

 • 1

  (தக்க சாதனங்களை, வழிமுறைகளைக் கொண்டு) ஒன்றின் தன்மை, செயல்பாடு போன்றவற்றை ஆராய்ந்து அறியும் முறை; சோதனை.

  ‘இரத்தப் பரிசோதனை நிலையம்’
  ‘இந்த மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் வாங்குகிறார்கள்’
  ‘மண் பரிசோதனையில் சில கனிமங்கள் இருப்பது தெரியவந்துள்ளது’

 • 2

  (பெரும்பாலும் கலை, இலக்கியங்களில்) புதியதாக ஒன்றைச் செய்து பார்க்கும் முறை.

  ‘ஓவியர் ஆதிமூலம் வெறும் கோடுகளை வைத்தே பல பரிசோதனைகளைச் செய்திருக்கிறார்’
  ‘நனவோடை உத்தியில் சில பரிசோதனை முயற்சிகளைத் தமிழில் நகுலன் செய்திருக்கிறார்’
  ‘20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் நவீன ஓவியத்தில் பல பரிசோதனைகள் செய்யப்பட்டன’