தமிழ் பரிணாமம் யின் அர்த்தம்

பரிணாமம்

பெயர்ச்சொல்

 • 1

  (உயிரினங்கள்) மாறும் சூழ்நிலைக்குத் தக்கவாறு எளிய அடிப்படையான வடிவங்களிலிருந்து புதிய அமைப்பும் இயக்கமும் கொண்ட புதிய உயிரினங்களாகப் படிப்படியாக (வெகு நீண்ட காலத்தில்) மாற்றம் அடைதல்.

  ‘பரிணாமத்தைப் பொறுத்தவரை தகுதி வாய்ந்த உயிரினங்களே தப்பிப் பிழைக்கும்’
  ‘பரிணாம வளர்ச்சியில் ஒரு சிறு மாற்றம் ஏற்படுவதற்குப் பல லட்சம் ஆண்டுகள் ஆகலாம்’

 • 2

  (ஒரு நிலையிலிருந்து வேறொரு நிலைக்கு) படிப்படியான மாற்றம் அல்லது வளர்ச்சி.

  ‘சுந்தர ராமசாமி சிறுகதைகளின் முழுத் தொகுப்பில் அவருடைய பரிணாம வளர்ச்சியை அறிந்துகொள்ள முடிகிறது’
  ‘கல்லிலும் ஓலைகளிலும் எழுத்துகளைப் பதிவுசெய்யும் முறை தொடங்கி இன்று அச்சுக்கலைவரை எழுத்து பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது’