தமிழ் பரிதாபம் யின் அர்த்தம்

பரிதாபம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒன்றின் அல்லது ஒருவரின் நிலையைக் கண்டு மனத்தில் எழும்) இரக்கம், அனுதாபம், வருத்தம் ஆகியவை கலந்த உணர்வு.

  ‘வண்டியில் அடிபட்டு நொண்டிய நாயைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது’
  ‘யாருடைய பரிதாபமும் எனக்குத் தேவையில்லை’
  ‘அந்த ஏழைக் குடும்பத்தின் மேல் பரிதாபம் கொண்டு அவர்களுக்குத் தேவையான உதவியைத் தான் செய்வதாக உறுதியளித்தார்’

 • 2

  மேற்குறிப்பிட்ட உணர்வைத் தூண்டும் நிலை.

  ‘பேருந்தில் பணத்தைப் பறிகொடுத்தவர் பரிதாபமாக என்னைப் பார்த்தார்’
  ‘ஓடும் ரயிலில் பரிதாபமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் புகைப்படம் அன்றைய நாளிதழில் வெளியாகியிருந்தது’