தமிழ் பரிந்து பேசு யின் அர்த்தம்

பரிந்து பேசு

வினைச்சொல்பேச, பேசி

  • 1

    (பிரச்சினை, தகராறு முதலியவற்றில் ஒருவருக்கு) சார்பாக அல்லது ஆதரவாகப் பேசுதல்; ஆதரவு தருதல்.

    ‘உன் நண்பன் என்பதற்காகப் பரிந்து பேசுகிறாயா?’
    ‘உங்கள் சண்டையில் நான் யாருக்கும் பரிந்து பேச மாட்டேன்’
    ‘தொழிலாளர்களுக்காக நிர்வாகத்திடம் பரிந்து பேசினார்’