தமிழ் பரிமாணம் யின் அர்த்தம்

பரிமாணம்

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு இடத்தின் அல்லது பொருளின் நீளம், அகலம், உயரம் ஆகிய அளவுகளுள் ஒன்று.

  ‘கோட்டிற்கு ஒரு பரிமாணம் மட்டுமே உண்டு’
  ‘செவ்வகத்துக்கு இரண்டு பரிமாணம்’
  ‘கனச் செவ்வகம் மூன்று பரிமாணங்களைக் கொண்டது’

 • 2

  ஒன்றில் அமைந்துள்ள கூறுகள், தன்மைகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கொண்டிருக்கும் உறவு/மேற்குறிப்பிட்டவற்றின் விரிவும் ஆழமும்.

  ‘அவர்கள் பிரச்சினையின் பரிமாணத்தைப் புரிந்துகொள்ளவே இல்லை’
  ‘வாழ்க்கையின் முழுப் பரிமாணத்தை அறிவதற்குப் பல காலம் ஆகும்’
  ‘இந்த ஓவியங்களை நீங்கள் புதிய பரிமாணத்தில் பார்க்க முயல வேண்டும்’